/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு சென்னைக்கு அனுப்புவது அதிகரிப்பு வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு சென்னைக்கு அனுப்புவது அதிகரிப்பு
வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு சென்னைக்கு அனுப்புவது அதிகரிப்பு
வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு சென்னைக்கு அனுப்புவது அதிகரிப்பு
வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு சென்னைக்கு அனுப்புவது அதிகரிப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:53 AM

காட்டுமன்னார்கோவில், : வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு 54 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது. கடந்தாண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால், இந்தாண்டு கோடை துவங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டதால், சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, மேட்டூரில், குறைந்த அளவு நீர் இருப்பு இருந்த நிலையிலும், கல்லணைக்கு தண்ணீர் பெறப்பட்டது. அங்கிருந்து கொள்ளிடம், கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 26ம் தேதி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, கடந்த 29ம் தேதி காலை முதல், வினாடிக்கு 18 கன அடி குடிநீர் சென்னைக்கு அனுப்பும் பணி துவங்கியது.
இந்நிலையில் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், தற்போது ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில், 640 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அதையடுத்து, சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 54 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.