Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு

ADDED : மார் 13, 2025 06:29 AM


Google News
பட்ஜெட்டில் சமூக நலத் துறை குறித்த இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

மாற்றுத்திறனாளிகள் இறக்க நேரிட்டால், ஈமச்சடங்கிற்காக அவரது உறவினர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ. 15 ஆயிரம் ரூபாய், ரூ. 25 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநில விருதுக்கான ரொக்க பரிசு தொகை ஒவ்வொரு பிரிவுக்கும் 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதுகுதண்டு பாதிப்பு உள்ள நபர்களுக்கும் சிறப்பு மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வாகனம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 முதல் 5ம் வகுப்புவரை ஆண்டிற்கு ஒரு முறை ரூ. 1000, ஆறாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ. 2,000, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.3,400 வழங்கப்பட்டு வருகிறது. இவை முறையே ஆண்டிற்கு ரூ. 4,000, ரூ. 5,000, ரூ. 6,400 ஆக உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை பட்டபடிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது ஆண்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உதவித்தொகை, 8000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முதுகலை மற்றும் தொழில்சார் பட்டபடிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டிற்கு 6,800 ரூபாய் வழங்கப்படும் உதவித் தொகை, ரூ. 9,800 ஆக உயர்த்தப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us