Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

ADDED : ஆக 02, 2024 11:38 PM


Google News

தொழிலாளர் துறை


தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கடந்த 2017 ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 19 வகையான வேலைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 5,220 முதல் ரூ. 13,00 ஆக இருந்தது. தற்போது ரூ. 5,220 இருந்து ரூ. 9,940 ஆக 90 சதவீதம் உயர்த்தியும், ரூ. 13,000 இருந்து ரூ. 23,790 ஆக 83 சதவீதம் உயர்த்தி ஒப்புதல் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை, கடைகள், நிறுவனங்களுக்கான உரிமம் வழங்கல், புதுப்பித்தல் வணிக ரீதியிலான சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்தாண்டு தொழிலாளர் துறைக்கு ரூ. 45.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்துறை


உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர்புற துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 58.75 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை, மாகி, ஏனாமில் ரூ. 24.35 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நகர பகுதியில் 24 மணி நேரம் குடிநீர் வழங்க ரூ. 20.38 கோடியில் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகளும், கனகன் ஏரி, தக்ககுட்டை அருகில் உள்ள தகனகுட்டை குளம் ரூ. 2.75 கோடியில் சீரமைப்பு, காரைக்கால் காஜியார் வீதி ஹைதர் பள்ளி குளம், திருநள்ளார் புதுக்குளம், சேனியார்குளம் ரூ. 2.71 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது.

நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 81 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் சுழற்சி நிதியும், நகர்புற வீடற்ற ஏழைகளுக்கு ரூ. 70 லட்சம் செலவில் தங்குமிடம் கட்டப்படும். நடப்பு ஆண்டில் ரூ. 475.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us