/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
ADDED : ஜூலை 04, 2024 03:37 AM
புதுச்சேரி : ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2016 ஜூலை 1ம் தேதி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமல் செய்யப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி, ஆறாவது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர். தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் ஆறாவது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
எனவே, புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
அகவிலைப்படி, 01.07.2023 முதல் 221 சதவீதத்தில் இருந்து 230 சதவீதமாகவும் மற்றும் 01.01.2024 முதல் 230 சதவீதத்தில் இருப்பது 239 சதவீதமாகவும் உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.