/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இணைய வழியில் சான்றிதழ் வழங்க வலியுறுத்தல் இணைய வழியில் சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்
இணைய வழியில் சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்
இணைய வழியில் சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்
இணைய வழியில் சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2024 05:27 AM
புதுச்சேரி : சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை இணைய வழி மூலம் வழங்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலர் சஞ்சைசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் கல்வி பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்கு. வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க சாதி, குடியிருப்பு, வருமானம் ஆகிய சான்றிதழ்கள் அவசியம் தேவைப்படுகிறது. ஆண்டு தோறும் பள்ளி கல்வியை முடித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகிய அலுவலங்களில் மாணவர்கள் அலையும் சூழல் இருக்கிறது.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அரசு இணைய வழி சேவையை துவக்கியது. சான்றிதழ்களை இணைய வழியாக விண்ணப்பித்து அதிலேயே சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போது, நேரில் வந்து சான்றிதழ்களை வாங்கி கொள்ளுங்கள் என தெரிவிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, வெளிப்படை தன்மையோடு, இணையவழியில் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.