ADDED : ஜூலை 30, 2024 05:00 AM

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த ஜி.என்., பாளையம் ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜேஸ்வரி, 20; இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்தார். அவரது தாய் வேலைக்கு சென்று திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஸ்வரியை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கார்த்திகேயன் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.