ADDED : மார் 12, 2025 06:33 AM
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையத்தை சேர்ந்தவர்விமல், 37; வீடுகளுக்கு பால் சீலிங் பணி செய்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை விட்டு பிரிந்தார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வாழ்க்கை இப்படி ஆகி விட்டது என, தந்தையிடம் தினமும் புலம்பிய அவர், மன உளைச்சலில் இருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, அறையில் உள்ள சீலிங் பேனில், விமல் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.