/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொத்தம் எவ்வளவு இணைப்புகள் உள்ளன? கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு 'செக்' மொத்தம் எவ்வளவு இணைப்புகள் உள்ளன? கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு 'செக்'
மொத்தம் எவ்வளவு இணைப்புகள் உள்ளன? கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு 'செக்'
மொத்தம் எவ்வளவு இணைப்புகள் உள்ளன? கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு 'செக்'
மொத்தம் எவ்வளவு இணைப்புகள் உள்ளன? கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு 'செக்'
ADDED : ஜூலை 14, 2024 05:58 AM
ஒவ்வொரு கேபிள் டி.வி., இணைப்பிற்கும், மாதந்தோறும் 8 ரூபாய் கேளிக்கை வரியாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் கேபிள் டி.வி., இணைப்பு இல்லாத குடும் பங்களே கிடையாது.
ஒரு வீட்டிற்கு ஒரு கேபிள் இணைப்பு என, வைத்தா லும், குறைந்தது 3 லட்சம் வீடுகளில் கேபிள் இணைப்பு இருக்க வேண்டும்.
ஆனால், 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது' போல, 393 ஆபரேட்டர்களும் மொத்தம் 58 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே உள்ளதாக கூறி, நகராட்சிக்கு வரி செலுத்துகின்றனர். இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதேபோல், கேபிள் டி.வி., சந்தா கட்டணத்திலும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. சந்தா கட்டணம் ஒவ்வொரு பகுதியிலும் 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இவற்றில் 10 சதவீதத்தை கேளிக்கை வரியாக அதாவது 30 ரூபாயை நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
இதை எதிர்த்து, புதுச்சேரி கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த ரிட் மனுக்களை, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் தள்ளுபடி செய்த ஐகோர்ட் கேளிக்கை வரியை வசூலிக்க நகராட்சிக்கு முழு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சித் துறை சார்பு செயலர் தலை மையில் குழு ஒன்று அமைக் கப்பட்டது. இக்குழு கேபிள் டி.வி., கேளிக்கை வரி வசூலிப்பு குறித்து இறுதி பரிந்துரையை சமர்ப்பித்தது.
இதனை பரிசீலனை செய்த அரசு, கேபிள் டி.வி., இணைப்பு ஒன்றிற்கு மாதந் தோறும் 8 ரூபாய் வசூல் செய்யவும், மூன்று ஆண்டிற்கு ஒருமுறை கேளிக்கை வரியை 10 சதவீதம் உயர்த்தவும், கடந்த மாதம் 28ம் தேதி ஆணை பிறப்பித்தது.
அரசின் முடிவு சம்பந்தமாக கேபிள் டி.வி., எம்.எஸ்.ஓ.,க்களை அழைத்து மேரி கட்டடத்தில் நேற்று விளக்கப்பட்டது. புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி விளக்கம் அளித்தார். அப்போது, ஒவ் வொரு இணைப்பிற்கும் கேளிக்கை வரியாக 8 ரூபாயை இந்த மாதம் முதல் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கும் கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள், அவர்களிடம் உள்ள கேபிள் டி.வி., இணைப்புகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.