ADDED : ஜூலை 22, 2024 01:45 AM
நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில், தோட்டக்கலை பயிர்களில் அதிக மகசூல் பெறுவது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சரோஜா கலந்து கொண்டு காய்கறி மற்றும் பழங்கள் பயிரில்பூச்சி தாக்குதல் மற்றும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினார்.
உதவி பேராசிரியர் இலக்கியா காய்கறி மற்றும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கக்கூடிய பழங்கள் மற்றும் மலர்கள் உற்பத்தியில் தொழில் நுட்பங்கள் கையாள்வது குறித்து பேசினார். முகாமில் ஏம்பலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.