ADDED : ஜூன் 26, 2024 02:38 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் திடீரென பெய்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 22ம் தேதியில் முதல் இன்று (26ம் தேதி) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதையடுத்து, புதுச்சேரியில் நேற்று இரவு 8:00 மணியளவில், திடீரென கருமேகம் சூழ்ந்து, 30 நிமிடம் வரை கன மழை பெய்தது.
இந்த மழையால், முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில், போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.