/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
ADDED : ஜூன் 17, 2024 06:59 AM
புதுச்சேரி: கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி;
மனித குலத்தின் மேன்மைக்காக, நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை ஆகிய நெறிகளை பின்பற்றி அனைவரும் அறவழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை இந்நாள் உணர்த்துகிறது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தி;
பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம் நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
இதுபோல் வைத்திலிங்கம் எம்.பி., எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.