Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிராண்ட் டிராவல் மேளா பேட்டிகள்

கிராண்ட் டிராவல் மேளா பேட்டிகள்

கிராண்ட் டிராவல் மேளா பேட்டிகள்


ADDED : மே 10, 2026 10:01 PM

Follow on Google

ADDED : மே 10, 2026 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அதிதி ஓட்டலில் தினமலர் மற்றும் தாமஸ் குக் இணைந்து கிராண்ட் டிராவல் மேளா நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

தாமஸ் குக் நிறுவன அதிகாரி சூரஜ் ராமச்சந்திரன் கூறியதாவது:

தினமலர் மற்றும் தாமஸ் குக் நிறுவனம் இணைந்து கிராண்ட் டிராவல் மேளா நடத்தப்பட்டது. இந்த மேளாவில் தினமலர் வாசகர்களுக்கு பிரத்யேகமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தாமஸ் குக் நிறுவனம் இந்தியாவின் முன்னணி சுற்றுலா நிறுவனமாகும். ​சுற்றுலாத் துறையில் சுமார் 250 ஆண்டுகள் அனுபவம் கொண்டது.

தற்போது, தினமலருடன் இணைந்து நடத்தும் மேளாவில், ​சுற்றுலா முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் வரை ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கப்படும். இது ஓராண்டிற்கு செல்லுபடியாகும். ​தினமலர் வாசகர்களுக்குச் சுற்றுலா பேக்கேஜ்களில் ரூ.70,000 வரை நேரடித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, ஆன்-ஸ்பாட் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக டிராலி பேக் மற்றும் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

நிறுவனம் ​பயணிகளுக்கு ஐந்து வகை உணவுகள் கொண்ட பிரத்யேக மெனுக்களை வழங்குகிறது. இந்தியாவில் முதல் முறையாக விசா நிராகரிக்கப்பட்டால் அதற்கான காப்பீடு வழங்கும் வசதியைத் தாமஸ் குக் நிறுவனம் வழங்குகிறது. மேலும், போர் அல்லது வான்வெளி மூடப்படுவது போன்ற எதிர்பாராத சிக்கல்களின் போது பயணிகளின் பணம் வீணாகாமல் இருக்கச் சிறப்புப் பாதுகாப்புக் காப்பீடுகளும் வழங்குகிறது.

__________________________________________________________________________

 

தினமலர் மற்றும் தாமஸ் குக் இணைந்து நடத்திய கிராண்ட் டிராவல் மேளாவில் வழங்கப்பட்ட விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் மற்றும் இந்தியாவிற்குள் எந்தெந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்லலாம் என்பது குறித்துத் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த மேளா ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகவும், சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு ஒரே இடத்தில் அனைத்துத் தகவல்களையும் பெற ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. 

– பிரபாகரன், புதுச்சேரி,

___________________________________________________________________

நான் நீண்ட காலமாக தினமலர் வாசகராக உள்ளேன். தினமலர் நடத்திய கிராண்ட் டிராவல் மேளாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று எனது 82வது பிறந்தநாளை முன்னிட்டு, கூடுதல் சிறப்புடன் தினமலர் ஆண்டுச் சந்தா கட்டியுள்ளேன். அதற்காக, எனக்குப் பரிசுகள் மற்றும் காப்பீடு சலுகைகள் வழங்கப்பட்டது.

​ஏற்கனவே பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்த அனுபவம் உள்ளது. இருப்பினும், தற்போது தாமஸ் குக் நிறுவனத்தின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவர்களின் வழிகாட்டுதலின்படி மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்துள்ளேன். 

– ஸ்ரீகாந்தன், வெங்கடா நகர், புதுச்சேரி.

​_______________________________________________________________________

 

இந்தச் கிராண்ட் டிராவல் மேளாவில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சுற்றுலாத் திட்டங்கள் முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வசதியாகவும் உள்ளது.

இங்கு ஆன்மிக சுற்றுலாவாக நேபாளத்திற்கு செல்ல முன்பதிவு செய்துள்ளேன். நான் நீண்டகால தினமலர் வாசகராக இருந்து வருகிறேன். தினமலரின் இத்தகைய முன்னெடுப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது. ​குடும்பத்தினர் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாகவும், மன நிறைவோடும் சுற்றுலா செல்ல இந்த மேளா ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. 

– சந்திரசேகரன், புதுச்சேரி. 

_______________________________________________________________

 

கிராண்ட் டிராவல் நிகழ்ச்சிக்கு தினமலர் நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து வந்தேன். சுற்றுலா சம்பந்தமான அனைத்து விவரங்களை தெரிந்து கொண்டேன். இங்கு உள்ளூர், வெளிநாடு என நிறைய பேக்கேஜூகள் உள்ளது. நாங்கள் இந்தோனேஷியா பாலிக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்துள்ளோம். அதில் உள்ள சுற்றுலா இடங்களை் குறித்த நிறைய புதிய தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டேன். நிறைய சலுகைகள் வழங்கினர்.

– செண்பகவள்ளி, பாக்கமுடையன்பேட், புதுச்சேரி.

___________________________________________________________

 

தினமலர் நாளிதழில் கிராண்ட் டிராவல் மேளா தொடர்பான விளம்பரத்தை பார்த்தேன். இங்கு தாமஸ் குக் டிராவல்ஸில் சர்வீஸ் நன்றாக இருக்கிறது. நானும் எனது மனைவியும் சிங்கப்பூர் செல்வதற்காக விசாரித்தோம். சென்னையில் இருந்து அழைத்துச் சென்று மலேசியா முருகர் கோவில் மற்றும் சிங்கப்பூர் பகுதிகளை சுற்றிக் காண்பித்துவிட்டு பாதுகாப்பாக அழைத்து வருவதாக கூறினர். இதனால் முன்பதிவு செய்துள்ளோம். 

– ராஜேந்திரன், லாஸ்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap