/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 35 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.21.16 கோடி வழங்க அரசு உத்தரவு 35 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.21.16 கோடி வழங்க அரசு உத்தரவு
35 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.21.16 கோடி வழங்க அரசு உத்தரவு
35 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.21.16 கோடி வழங்க அரசு உத்தரவு
35 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.21.16 கோடி வழங்க அரசு உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 04:21 AM
புதுச்சேரி: அரசு நிதியுதவி பெறும் 35 பள்ளிகளுக்கு, 21.16 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு விடுவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் அரசு நிதியுதவி பெறும் 35 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. இருப்பினும் இதற்கான செலவின தொகையில் 95 சதவீதம் அரசு ஏற்றுக் கொள்ளும்.
மீதமுள்ள 5 சதவீதம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஏற்க வேண்டும். இவர்களுக்கான சம்பள தொகையை அரசு அவ்வப்போது விடுவித்து வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான சம்பளம், பென்ஷன் தொகைக்கு 21 கோடியே 16 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை புதுச்சேரி அரசு பள்ளி கல்வித் துறை வாயிலாக விடுவித்துள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிதியில் 2024-25ம் ஆண்டுக்கான ஊழியர்களின் தொழில்வரியை பிடித்து செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்துமாறு கல்வித் துறை அறிவுறுத்திள்ளது.
இதற்கான உத்தரவை கல்வி துறை சார்பு செயலர் வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள் ளார்.