ADDED : ஜூலை 28, 2024 06:07 AM
புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணனை, நேற்று காலை 10:30 மணிக்கு சந்திக்க முதல்வர் ரங்கசாமி நேரம் கேட்டிருந்தார்.
கவர்னரை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைக்க அழைப்பு விடுக்கவும், அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும், கோப்பு அளிக்கவும் முதல்வர் திட்டமிட்டிருந்தார்.
கவர்னர் ராதாகிருஷ்ணனின் நெருங்கிய நண்பரான முன்னாள் எம்.பி., மதன் கோயம்புத்துாரில் இறந்தார். இதனால் நேற்று காலை அவர், கோயம்புத்துார் புறப்பட்டார்.
இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு, நேற்று இரவு மீண்டும் புதுச்சேரி திரும்பினார்.