Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்

சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்

சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்

சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்

ADDED : ஜூன் 20, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
மதுக்கடைகளுக்கு பெயர் பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன. பிராந்திய ரீதியாக பார்க்கும்போது, புதுச்சேரியில் 85 சாராயக்கடைகள், காரைக்காலில் 25 சாராயக்கடைகள் உள்ளன. இதேபோல் புதுச்சேரியில் 65 கள்ளுக்கடைகள், காரைக்காலில் 26 கள்ளுக்கடைகள் உள்ளன.

ஏல நடைமுறை


மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சாராயக்கடை, கள்ளுக்கடைகளுக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி முதலாம் ஆண்டு எடுக்கப்படும், சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் கூடுதலாக 5 சதவீதம் கிஸ்தி தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இதேபோல் அதற்கு அடுத்த ஆண்டுகளில்மேலும் 5 சதவீதம் கூடுதல் கிஸ்தி தொகையும் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

கவர்னர் அதிரடி


இந்த புதுப்பிப்பு கிஸ்தி தொகை செலுத்தாவிட்டால் மறு ஏலம் விடப்படும். அதன்படி கிஸ்தி தொகை செலுத்தாத அனைத்து சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளுக்குஜூலை மாதத்தில் மறு ஏலம் விடஅனுமதி கேட்டு, கலால் துறை மூலம் கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கோப்பிற்கு அனுமதி தராத கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனால் புதுச்சேரியில் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளுக்கு மறு ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன


புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தில் மாகி, ஏனாமில் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் இல்லை.எனவே, மாகி, ஏனாமில் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் இல்லாதபோது, புதுச்சேரி, காரைக்காலுக்கு மட்டும் எதற்கு இந்த சாராயம் மற்றும் கள்ளுகடைகள் தேவைப்படுகிறது.

அதற்கு அப்படி என்ன அவசியம் என்று சராமரியாக கேள்வி எழுப்பியுள்ள கவர்னர் ராதாகிருஷ்ணன் அந்த கோப்பினை அதிரடியாக கலால் துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

கவர்னர் அதிரடியால் ஏல ஏற்பாடுகளை செய்துள்ள கலால் துறை என்ன செய்வது என்று தெரியாமல் கைபிசைந்து வருகின்றது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதனால் திட்டமிட்டப்படி ஜூலை மாதம் புதுச்சேரியில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகளுக்கு மறு ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு முடிவு என்ன


மதுக்கடைகள் மறு ஏலக்கோப்பினை கவர்னர் கலால் துறைக்கே கோப்பினை திருப்பி அனுப்பியுள்ளதால் புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மதுக்கடை விவகாரத்தில் கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில் புதுச்சேரி அரசு வரிவருவாயில் கலால் வருவாயை பெரிதும் சார்ந்துள்ளது. கலால் துறை மூலம் ஆண்டிற்கு 1480 கோடி வருவாய் ஈட்டி வருகின்றது.

இதில் சாராயக்கடைகள்,கள்ளுக்கடைகள் மட்டும் 100 கோடி ரூபாய் அளவிற்கு பங்களிப்பு அளித்து வருகின்றது.

கவர்னரின் உத்தரவினை ஏற்று, புதுச்சேரி சாராயக்கடை, மதுக்கடைகளை மூட நினைத்தால் வரி வருவாயில் 100 கோடி ரூபாய் துண்டு விழும். இந்த இழப்பினை ஏற்று சாராயக்கடை, கள்ளுக்கடைகள் மறுஏலத்தை கைவிட போகிறதா அல்லது கவர்னரை நேரில் முதல்வர் ரங்கசாமி சந்தித்து சாராயக்கடை, கள்ளுக்கடை ஏல கோப்பிற்கு அனுமதி பெற போகிறரா என்பதே கேள்வியாக எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us