/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதாரத்துறையில் விதிமீறி பணி நியமனம் அரசு ஊழியர் சங்க சம்மேளனம் குற்றச்சாட்டு சுகாதாரத்துறையில் விதிமீறி பணி நியமனம் அரசு ஊழியர் சங்க சம்மேளனம் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறையில் விதிமீறி பணி நியமனம் அரசு ஊழியர் சங்க சம்மேளனம் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறையில் விதிமீறி பணி நியமனம் அரசு ஊழியர் சங்க சம்மேளனம் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறையில் விதிமீறி பணி நியமனம் அரசு ஊழியர் சங்க சம்மேளனம் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 12, 2024 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறையில் விதிமுறைகளை மீறி, தகுதியற்ற வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் 137 வாரிசுதாரர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை, தகுதி அடிப்படையில், பணி வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், தற்போது 37 பேருக்கு பணி வழங்க, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், பணிக்கு தகுதியானவர்கள் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு, விதிமுறைகளை மீறி, தகுதியவற்றவர்களை பணியில் நியமிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து முறையிட சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, இதுசம்மந்தமாக வலியுறுத்த உள்ளோம். வாரிசுதாரர்கள் அனைவருக்கும், தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அப்படி இல்லை எனில், போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.