/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில்வே திட்டங்களுக்கு நிதி: மாஜி எம்.பி., வலியுறுத்தல் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
ரயில்வே திட்டங்களுக்கு நிதி: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
ரயில்வே திட்டங்களுக்கு நிதி: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
ரயில்வே திட்டங்களுக்கு நிதி: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2024 05:36 AM
புதுச்சேரி: புதுச்சேரி ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசின் பட்ஜெட் வரும் 23ம் தேதி சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
இதுவரை எந்த பட்ஜெட்டிலும் புதுச்சேரியின் ரயில்வே வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில்செலவிடப்பட இருக்கும் தொகையில் 0.5 சதவீதம் உள்ள செலவை புதுச்சேரிக்கு ஒதுக்கித் தர வேண்டும்.
சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி வந்து கடலுார் செல்லும் ரயில்வே திட்டத்தை நான் எம்.பி.,யாக இருந்தபோது சிரமப்பட்டு பெற்றுத்தந்தேன். இந்த வழித்தடத்திற்காக நிலம் பெறுவதில் சிக்கல் இருந்ததால் இத்திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இத்திட்டம் வந்தால்சாலை போக்குவரத்தில் உள்ள நெரிசல்குறைந்து, மக்கள் கடற்கரை வழியாக பயணம் செல்ல வாய்ப்பாக இருக்கும்.
புதுச்சேரியில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மாலை 6:00 மணிக்கு வாரத்தில் ஐந்து அல்லது மூன்று நாட்கள் இயக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து மதுரை வழியாக, துாத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
திண்டிவனம் - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதையை உடனடியாக அமைக்க வேண்டும். இதனால் பயண நேரம், துாரம் குறையும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.