/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிப்பு ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிப்பு
ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிப்பு
ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிப்பு
ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிப்பு
ADDED : ஜூன் 10, 2024 07:00 AM

புதுச்சேரி : ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் புதுச்சேரி துாதரகத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், ஓட்டளித்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் குடிமக்கள், தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய லோக்சபாவிற்கு நேரடியாக தேர்ந்தெடுப்பர். இந்த தேர்தல், சர்வதேச அளவில், 5 ஆண்டுகளுக்கு நடக்கும்.
ஐரோப்பிய லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள, 720 இடங்களில், 81 இடங்களில், பிரான்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரெஞ்சு எம்.பி.,க்கள் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரி மை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கு, 38 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய முழுவதும், கடந்த, 6,ம் தேதி முதல் நேற்று வரை தேர்தல் நடந்தது. இந்த நிலையில், ஆசியாவில் வாக்காளர் பட்டியலில், பதிவு செய்த, பிரெஞ்சு குடி மக்களுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்களுக்கு, அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே, ஓட்டளிக்கும் உரிமையை, பிரான்ஸ் அரசு வழங்குகிறது. அதன்படி, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள, 4,546 பிரெஞ்சு குடிமக்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். இவர்கள் அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, புதுச்சேரி 2; சென்னை 1; காரைக்கால் 1; என மொத்தமாக, 4 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
புதுச்சேரி பிரெஞ்சு துாதரகத்தில், நேற்று காலை 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன், ஓட்டளித்தனர். மாலை 6:00 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.