/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி; போலீசார் விசாரணை மூவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி; போலீசார் விசாரணை
மூவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி; போலீசார் விசாரணை
மூவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி; போலீசார் விசாரணை
மூவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி; போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 19, 2024 05:22 AM
புதுச்சேரி : ஆன்லைனில் 3 பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ரம்யா. இவரை, போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் என்றார். அதனை நம்பி அவர் ரூ.27 ஆயிரம் செலுத்தி, டாஸ்கை முடித்த பின், அந்த பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
குருமாம்பேட்டை சேர்ந்த லட்சுமி நாராயணன், செயலி மூலம் ரூ.13 ஆயிரத்து 600 செலுத்தி பழைய பர்னிச்சர் பொருட்கள் ஆர்டர் செய்தார். ஆனால், பல நாட்களாகியும் பொருட்கள் வராமல் ஏமாற்றப்பட்டார்.
முதலியார்பேட்டையை, சேர்ந்தவர் வெங்கடகுமார். இவரின் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கம்பெனி வவுச்சரை தெரியாத நபர் மோசடியாக பயன்படுத்தி உள்ளார். இவர்கள் அளித்த புகார்களின்பேரில் சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.