/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குப்பை வரி ரத்து அரசாணை வெளியிட வேண்டும்; பா.ஜ., மாஜி மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல் குப்பை வரி ரத்து அரசாணை வெளியிட வேண்டும்; பா.ஜ., மாஜி மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
குப்பை வரி ரத்து அரசாணை வெளியிட வேண்டும்; பா.ஜ., மாஜி மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
குப்பை வரி ரத்து அரசாணை வெளியிட வேண்டும்; பா.ஜ., மாஜி மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
குப்பை வரி ரத்து அரசாணை வெளியிட வேண்டும்; பா.ஜ., மாஜி மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 05:08 AM
புதுச்சேரி : குப்பை வரி ரத்துக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என முன்னாள் பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி சட்டசபை முதல் கூட்ட தொடரில் குப்பை வரி ரத்து என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். ஆனால், உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களிடம் குப்பை வரி கட்டடினால் தான் வீட்டு வரி கட்ட முடியும் என ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்கின்றனர். குப்பை வரி ரத்து என்றால் அதற்கான அரசாணையை பட்ஜெட்டிற்கு முன்னதாக வெளியிட வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் குப்பை வரி, வீட்டு வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சொத்து வரி என்று பல வரிகள் கட்டினாலும், சப் டைட்டிலில் பல கூடுதல் வரிகள் மக்களை பயமுறுத்தி வருகிறது.
இதன் வெளிப்பாடு மக்களின் கோபம் காங்., கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளது. இதனால் அரசு சரியான நடவடிக்கை எடுத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைகள் நலிவடைந்ததால், வேலை இல்லா திண்டாட்டம் பெருகி, புதுச்சேரி மக்கள் வெளியூர்களில் குடியேறும் நிலை உருவாகியுள்ள நிலை மாற வேண்டும். மக்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் இல்லாததால் புதுச்சேரி மக்கள் இன்னும் இலவசத்தை நம்பியே வாழும் நிலை உள்ளது.
உடனடியாக வேலை வாய்ப்பு அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றாததால் லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவியது. எனவே, வருங்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் மட்டுமே இந்த அரசு மீண்டும் வெற்றி வாய்ப்பை பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.