/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு திறப்பு தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு திறப்பு
தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு திறப்பு
தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு திறப்பு
தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு திறப்பு
ADDED : ஜூலை 30, 2024 05:05 AM

திருக்கனுார்: திருக்கனுார் தீயணைப்பு நிலையத்தில் புனரமைக்கப்பட்ட ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்களை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுச்சேரி தீயணைப்புத்துறை சார்பில் திருக்கனுார் தீயணைப்பு நிலையத்தில் உள்ள ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், தீயணைப்பு துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில், அரசு சார்பு செயலர் ஹிரண், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் பொதுப்பணித் துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், அமைச்சர் சாய் சரவணன் குமாரிடம், புதுச்சேரியில் ரூ.15 ஆயிரம் பெற்றுக் கொண்டு தான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளது குறித்த நிருபர்களின் கேள்வி எழுப்பினர். அதற்கு, அமைச்சர் சாய் சரவணன் குமார், மக்களால் புறக்கணிக்கப்பட்ட அன்பழகனின் குற்றச் சாட்டிற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.