ADDED : ஜூன் 11, 2024 11:20 PM
நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் ஏரிக்கரை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
கல்மண்டபம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விலைநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல், எள், கரும்பு உள்ளிட்ட விலை பொருட்களை அப்பகுதி ஏரிக்கரை அருகே உள்ள சிமெண்ட் களத்தில் வைத்து பிரித்து எடுக்கின்றனர். பின் அந்த கூளங்கள் மற்றும் காய்ந்த எள் கம்புகள், கரும்பு தோகைகளை ஏரிக்கரை ஓரத்தில் கொட்டுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த தோகைகள் திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், ஏரியில் இருந்த சீம கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.