ADDED : மே 12, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் ராகினி, 19. இவர் காலாப்பட்டு தனியார் கல்லுாரியில் எம்.எல்.டி., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லுாரி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கல்லுாரிக்கு வரவில்லை என, தெரியவந்தது.
இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
