/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'வாங்க பழகலாம்' என அழைத்து டாக்டரிடம் ரூ.65,000 பறிப்பு 'வாங்க பழகலாம்' என அழைத்து டாக்டரிடம் ரூ.65,000 பறிப்பு
'வாங்க பழகலாம்' என அழைத்து டாக்டரிடம் ரூ.65,000 பறிப்பு
'வாங்க பழகலாம்' என அழைத்து டாக்டரிடம் ரூ.65,000 பறிப்பு
'வாங்க பழகலாம்' என அழைத்து டாக்டரிடம் ரூ.65,000 பறிப்பு
ADDED : ஜூன் 13, 2024 02:41 AM

புதுச்சேரி:ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பியுஷ் அகர்வால், 23; ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் டேட்டிங் மற்றும் சாட்டிங் மொபைல் அப்ளிகேஷனில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலருடன் பேசினார். அப்போது எதிர் முனையில் பேசியவர்கள், 'நாங்களும் புதுச்சேரியில் தான் தங்கியுள்ளோம். உங்களை சந்திக்க வேண்டும்; வாங்க பழகலாம்' என அழைப்பு விடுத்தனர்.
அதையேற்ற பியுஷ் அகர்வால் நேற்று முன்தினம் மதியம் புதுச்சேரி சவுரிராயலு வீதியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸ் அறைக்கு சென்றார்.
அங்கு, தயாராக இருந்த நான்கு பேர், பியுஷ் அகர்வாலை சுற்றி வளைத்து தாக்கி, அவரது வங்கி கணக்கில் இருந்து, 'ஜிபே' மூலம் 65,000 ரூபாயை தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றினர்.
அங்கிருந்து தப்பி வந்த டாக்டர் பியுஷ் அகர்வால் கொடுத்த புகாரின்படி ஒதியஞ்சாலை போலீசார், கெஸ்ட் ஹவுஸ் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த சரவணன், 24; திருச்சி சாலை, அழகர் நகர் கவுதம், 26; சிவகாம பிள்ளை தெரு டேனியல் ராஜ், 25; ஆண்டவர் நகர் கவின், 23; என்பதும், இவர்கள் நாமக்கல்லில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த நான்கு மொபைல் போன்கள் மற்றும் 65,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.