/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுத்து உடற் கூராய்வு பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுத்து உடற் கூராய்வு
பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுத்து உடற் கூராய்வு
பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுத்து உடற் கூராய்வு
பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுத்து உடற் கூராய்வு
ADDED : ஜூலை 30, 2024 05:10 AM
புதுச்சேரி: பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகம் உடல் கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் குழுவினர் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரினாவில் சுற்றுலாத்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விட்டு 10 ஆண்டிற்கு பராமரித்து கொள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க பட்டுள்ளது.
பாண்டி மெரினாவில் சப்கான்ட்ராக் எடுத்த நபர், 4 ஒட்டகம், 2 குதிரைகளை கொண்டு தொழில் செய்து வந்தார். ஒட்டகம், குதிரையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்யும் தொழில் நடந்து வந்தது.
சுற்றுலா பயணிகளை சவாரி செய்ய பயன்படுத்தி வந்த 13 வயது ஆண் ஒட்டகம் கடந்த வாரம் உயிரிழந்தது. அதனை பாண்டி மெரினா கடற்கரையில் அருகே குழிதோண்டி புதைத்தனர்.
மர்ம நபரை கொலைசெய்து புதைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியதால், ஒதியஞ் சாலை போலீசார் தாசில்தார் பிரித்வி முன்னிலையில் புதைக்கப்பட்டது ஒட்டகம் தானா என்பதை ஆய்வு செய்தனர்.
ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி பார்த்தபோது, புதைக்கப்பட்டது ஒட்டகம் என தெரியவந்தது.
அப்போது, விலங்கு நல ஆர்வலர்கள் ஒட்டகம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. சட்டப்படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், குருமாம்பேட் கால்நடை மருத்துவ கல்லுாரி நோய் குறியியல் துறை தலைவர் குமார், பேராசிரியர் அவிநாஷ் லக்கார்னி, கால்நடை மருத்துவர் குமரன் தலைமையிலான குழுவினர், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் புதைக்கப்பட்ட ஒட்டகம் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்தனர்.
ஒட்டகத்தின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது. ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மணி நேரம் நடந்த உடற்கூறாய்வுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் ஒட்டகம் புதைக்கப் பட்டது.