/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடக்க கல்வி பட்டய தேர்வு 'ஹால் டிக்கெட்' தொடக்க கல்வி பட்டய தேர்வு 'ஹால் டிக்கெட்'
தொடக்க கல்வி பட்டய தேர்வு 'ஹால் டிக்கெட்'
தொடக்க கல்வி பட்டய தேர்வு 'ஹால் டிக்கெட்'
தொடக்க கல்வி பட்டய தேர்வு 'ஹால் டிக்கெட்'
ADDED : ஜூன் 12, 2024 02:17 AM
புதுச்சேரி, : தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இன்று முதல் ஹால்டிக்கட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2024ம் ஆண்டிற்கான தொடக்க கல்வி பட்டயத்திற்கான முதலாம் ஆண்டு தேர்வு வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் ஆண்டு தேர்வு வரும் 20ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் மற்றும் தட்கலில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இன்று 12ம் தேதி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதள மூலம், தங்களின், விண்ணப்ப எண், பிறந்த தேதி, விபரங்களை உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.