/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு மின்துறை எச்சரிக்கை கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு மின்துறை எச்சரிக்கை
கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு மின்துறை எச்சரிக்கை
கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு மின்துறை எச்சரிக்கை
கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு மின்துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 04:09 AM
புதுச்சேரி, : மின் கட்டண பாக்கி தொகையை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க மின்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரியில் மின் நுகர்வோர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் மின் கட்டணம் மூலம் மின்துறை ஊழியர்களுக்கு ஊதியம், வெளிமாநில மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் வாங்குதல், மின் உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்டவை நடக்கிறது.
புதுச்சேரியில் ஏராளமான குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை வசூலிக்க மின்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இது குறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பிராந்தியத் தின் கிராமப்புற மற்றும் நகர இயக்குதல் பராமரித்தல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பு மற்றும் அபராத தொகையை தவிர்த்து மின் துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுகொள்ளப்படு கின்றனர்.