/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் ஆணையம் செயல்படவில்லை பா.ம.க., வழக்கறிஞர் பாலு ஆதங்கம் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை பா.ம.க., வழக்கறிஞர் பாலு ஆதங்கம்
தேர்தல் ஆணையம் செயல்படவில்லை பா.ம.க., வழக்கறிஞர் பாலு ஆதங்கம்
தேர்தல் ஆணையம் செயல்படவில்லை பா.ம.க., வழக்கறிஞர் பாலு ஆதங்கம்
தேர்தல் ஆணையம் செயல்படவில்லை பா.ம.க., வழக்கறிஞர் பாலு ஆதங்கம்
ADDED : ஜூலை 14, 2024 06:10 AM
விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால் பா.ம.க., வெற்றி பெற்றிருக்கும்' என வழக்கறிஞர் பாலு கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால் பா.ம.க., வெற்றி பெற்றிருக்கும். அனைத்து அ.தி.மு.க.,வினரும் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கவில்லை. எம்.பி., தேர்தல் மனநிலையிலிருந்து மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் மாறவில்லை. இந்த நிலை நிரந்தரமானது இல்லை.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் தி.மு.க., துரோகம் இழைத்துள்ளது. கடந்த இடைத்தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாகக் கூறி அதை இப்போது வரை நிறைவேற்றவில்லை. இவ்வாறு பாலு கூறினார்.