ADDED : ஜூலை 20, 2024 05:02 AM

காரைக்கால்: திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இதனால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நெரிசல் காரணமாக பக்தர்கள் காணிக்கையை டிஜிட்டல் வழியாக செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சார்பில் டிஜிட்டல் முறையில் 'இ'உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் நடந்தது. இதில் பக்தர்கள் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து தங்கள் காணிக்கையை செலுத்தினார்.
இதில் வங்கி முதன்மை மேலாளர் கணேசன். நவீன் , கோவில் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.