அரியாங்குப்பம்: முதலியார்பேட்டை அடுத்த வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 63; ஆட்டோ டிரைவர், திருமணமாகாதவர். தனியாக வாடகை வீட்டில் வசித்தார்.
இவருக்கு, இதய நோய் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் ஆட்டோ சவாரி முடித்து வீட்டிற்கு வந்து படுத்தவர் நேற்று காலையில் எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த வீட்டு கீழ் தளத்தில் இருக்கும் வீட்டு உரிமையாளர் சென்று பார்த்த போது, செல்வராஜ் அறையில் இறந்து கிடந்தார்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.