/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீர் வினியோகம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு குடிநீர் வினியோகம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
குடிநீர் வினியோகம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
குடிநீர் வினியோகம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
குடிநீர் வினியோகம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:48 AM

புதுச்சேரி: காட்டாமணி குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், குடிநீர் வினியோகத்தை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
காட்டாமணிகுப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர் அதிக உப்பு தன்மை கொண்டதாக இருந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர். அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, சுத்தமான குடி நீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
சுகாதாரமான குடிநீர், காட்டாமணி குப்பம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து நேற்று முதல் வினியோகம் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, புதிய குடிநீர் இணைப்பை இயக்கி வைத்தார். பொதுப்பணித்துறை இளநிலை பொறியா ளர் சங்கர், ஞானவேல், பொதுப் பணித்துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.