/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அ.தி.மு.க., உட்பட 24 வேட்பாளர்களின் 'டிபாசிட் காலி' அ.தி.மு.க., உட்பட 24 வேட்பாளர்களின் 'டிபாசிட் காலி'
அ.தி.மு.க., உட்பட 24 வேட்பாளர்களின் 'டிபாசிட் காலி'
அ.தி.மு.க., உட்பட 24 வேட்பாளர்களின் 'டிபாசிட் காலி'
அ.தி.மு.க., உட்பட 24 வேட்பாளர்களின் 'டிபாசிட் காலி'
ADDED : ஜூன் 05, 2024 12:29 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சி உள்பட ஐந்து முக்கிய அரசியல் கட்சிகளும்,19 சுயேச்சைகளும் டிபாசிட் இழந்தனர்.
லோக்சபா தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெறும் வேட்பாளர்களுக்குமட்டுமே கட்டிய டிபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். அதற்குகுறைவான ஓட்டுகளை பெறும் வேட்பாளர்களின் டிபாசிட் தொகை அரசின் கஜானாவிற்கு சென்று விடும்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 8,07,724 லட்சம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
அதன்படி ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளாக 1,34,620 மேல் பெற்ற காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் டிபாசிட் தொகையை தக்கவைத்துக்கொண்டனர்.
ஐந்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சைகள் என 24 பேர் டிபாசிட் தொகையைஇழந்தனர்.
டிபாசிட் தொகையை இழந்த அரசியல் கட்சிகள் பட்டியலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீ கரிக்கப்பட்ட அ.தி.மு.க., - பகுஜன் சமாஜ் கட்சிகளும் உள்ளன.
இதேபோல் பதிவு செய்த அரசியல் கட்சிகளான நாம் தமிழர் கட்சி, சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப்இந்தியா (சுசி கம்யூனிஸ்ட்) கட்சி, ஒருங்கிணைந்த இந்திய குடியரசுகட்சிகளும் டிபாசிட் இழந்துள்ளன. மற்றவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாவர்.