/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்காளன் பேச்சை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் அங்காளன் பேச்சை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
அங்காளன் பேச்சை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
அங்காளன் பேச்சை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
அங்காளன் பேச்சை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 30, 2024 05:02 AM
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியை விமர்சித்து பேசிய அங்காளன் எம்.எல்.ஏ., வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இது என்.ஆர்.காங்., - பா.ஜ., நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள்., கல்யாணசுந்தரம், அசோக்பாபு, ஜானக்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்., அங்காளன், சிவசங்கர் ஆகியோர் கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினர்.
இதனிடையே அங்காளன் எம்.எல்.ஏ., பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில் முதல்வர் ரங்கசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.
அவர் பேசியதை கண்டித்து, உப்பளம் தொகுதி என்.ஆர்.காங்., சார்பில், இன்று காலை 10:00 மணிக்கு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.