/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்திரப் பதிவு துறை சேவைகள் 4 நாட்களுக்கு நிறுத்தம் பத்திரப் பதிவு துறை சேவைகள் 4 நாட்களுக்கு நிறுத்தம்
பத்திரப் பதிவு துறை சேவைகள் 4 நாட்களுக்கு நிறுத்தம்
பத்திரப் பதிவு துறை சேவைகள் 4 நாட்களுக்கு நிறுத்தம்
பத்திரப் பதிவு துறை சேவைகள் 4 நாட்களுக்கு நிறுத்தம்
ADDED : ஜூலை 19, 2024 04:42 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட பதிவாளர் தயாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பதிவுத்துறை சார்ந்த செயல்முறைகளை கணினிமயமாக்குவதில் இணையதளம் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க புதுச்சேரி பதிவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தற்போது பதிவுத் துறை பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் பத்திர பதிவு, வில்லங்க சான்றிதழ் வழங்குதல், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், திருமண சான்றிதழ்கள் அளிக்கும் சேவைகள்இன்று (19ம் தேதி)மாலை 6 மணி முதல் வரும் 22ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடைபடும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.