Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நீட்' அல்லாத படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு: பிராந்திய ரீதியான இட ஒதுக்கீடு தொடர்கிறது

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு: பிராந்திய ரீதியான இட ஒதுக்கீடு தொடர்கிறது

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு: பிராந்திய ரீதியான இட ஒதுக்கீடு தொடர்கிறது

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு: பிராந்திய ரீதியான இட ஒதுக்கீடு தொடர்கிறது

ADDED : ஜூன் 28, 2024 06:10 AM


Google News
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு கடந்த 13ம் தேதி வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டது.

தொடர்ந்து ஆட்சேபனைகள் வரவேற்று, செம்மைப்படுத்தப்பட்ட தரவரிசை பட்டியலை தயார் செய்து வருகிறது.நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு முதற் கட்ட கவுன்சிலிங் நடத்த முடிவு செய்துள்ளசென்டாக் தற்போது, இட ஒதுக்கீடு வாரியாக இடங்களை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.

பிராந்திய இட ஒதுக்கீடு


புதுச்சேரியில் பிராந்திய ரீதியாக புதுச்சேரிக்கு 75, காரைக்கால்-18, மாகி-4, ஏனாம்-3 சதவீதம் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த இட ஒதுக்கீட்டினை விலக்கி கொள்ள வேண்டும் என, நீண்ட நாட்களாக புதுச்சேரி பிராந்திய மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தாண்டு கவுன்சிலிங்கிலும் பிராந்திய ரீதியாக இட ஒதுக்கீடு விலக்கி கொள்ளப்படாமல் தொடரும் என, அறிவிக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலை அறிவியல்


அதிக போட்டி ஏற்பட்டுள்ள கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு மொத்தமுள்ள 7 அரசு கல்லுாரிகளில் சேர 7,957 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இக்கல்லுாரிகளில் மொத்தமே 4,290 இடங்கள் மட்டுமே உள்ளன.

அதிகபட்சமாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி-1,680, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் -1,440 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது -1,719, இ.டபுள்யூ.எஸ்., -426, ஓ.பி.சி., -472, எம்.பி.சி.,-772, எஸ்.சி., -686, எஸ்.டி., -22, பி.டி.,-21, மீனவர் -86, முஸ்லீம் -86 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

உள் ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர் வாரிசு-172, மாற்றுத்திறனாளிகள்-215, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-129, விளையாட்டு வீரர்-43, கிராமப்புற மாணவர்களுக்கு 1,111 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பி.டெக்.,


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினை பொருத்தவரை, மொத்தம் 438 பி.டெக்., இடங்கள், காரைக்கால் அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் -153, மகளிர் அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் -255 இடங்கள் உள்ளன.

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளை பொருத்த வரை மொத்தமுள்ள 10 கல்லுாரிகளில் 2,580 இடங்கள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்படுகிறது. இந்த இடங்கள் பொது-1290, ஓ.பி.சி., -284, எம்.பி.சி., -464, எஸ்.சி., -413, எஸ்.டி., -13, பி.டி., -13, மீனவர் -52, முஸ்லீம் -51 என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் உள் ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர்-103, மாற்றுத்திறனாளி-129, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-77, விளையாட்டு-26 இடங்கள் உள் ஒதுக்கீடாக இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3,426 இடங்கள் நிரப்பட உள்ளன. பி.டெக்., படிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து 4,783 மாணவர்களும், பிற மாநிலங்களில் இருந்து 1,024 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதர படிப்புகள்


இதேபோல் பி.ஆர்க்., படிப்பில் -51 இடங்கள், பி.ஏ.எல்.எல்.பி., சட்ட படிப்பில் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி-51 இடங்கள், மணக்குள விநாயகர் கல்லுாரியில்-120 இடங்கள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளது.

கால்நடை அறிவியல் படிப்பு, பி.எஸ்.சி., அக்ரி, உள்ளிட்ட படிப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வாரியாக சென்டாக் இணையதளத்தில் இட விபரங்கள் வெளியிட்டுள்ளது. அனைத்து நீட் அல்லாத படிப்புகளுக்கும் ஓரிரு தினங்களில் கணினி முறையில் கலந்தாய்வு நடத்தி இடங்களை வெளியிட சென்டாக் முழு வீச்சில் இறங்கியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us