ADDED : ஜூன் 08, 2024 04:39 AM

பாகூர் : புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், பாகூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால், பல்வேறு கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. இதனிடையே பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்த சிந்தன், 49; என்பவரின் சிமென்ட் ஷீட் கூரை போட்ட வீட்டின் பக்கவாட்டு சுவர், மழைக்கு இடிந்து விழுந்தது.
சுவர் வெளிப்புறமாக விழுந்ததால், வீட்டிற்குள் துாங்கி கொண்டிருந்த சிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.