/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம் மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்
மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்
மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்
மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்
ADDED : ஜூலை 13, 2024 05:56 AM
திருக்கனுார்: திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நேற்றிரவு 7:00 மணி அளவில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறைக்காற்று காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதற்கிடையே திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு இருளர் குடியிருப்பு அருகே சாலையோரம் வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்றின் மீது பலத்த சத்ததுடன் மின்னல் தாக்கியது. இதில், தென்னை மரத்தின் மேல் பகுதி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
மேலும், குடியிருப்பு அருகே ஏற்பட்ட பலத்த சத்தம் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்
பாகூர் மற்றும் அதன் சுற்று வாட்டார பகுதியில் நேற்று இரவு 8:00 மணி முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் தடை பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.