/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் வங்கிக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட் அதிரடி தனியார் வங்கிக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட் அதிரடி
தனியார் வங்கிக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட் அதிரடி
தனியார் வங்கிக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட் அதிரடி
தனியார் வங்கிக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட் அதிரடி
ADDED : ஜூலை 24, 2024 06:09 AM
புதுச்சேரி : வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்., மூலம், முறையற்ற வகையில், எடுக்கப்பட்ட 3.25 லட்சம் ரூபாயை திருப்பி வழங்க, வங்கிக்கு புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லாஸ்பேட்டை, தாகூர் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவர் எச்.டி.எப்.சி., வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். அவரது வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடைபெற்றால், அவருக்கு இமெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வங்கி தெரியப்படுத்தும் வசதியும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், அவர் பணி நிமித்தமாக, ஆஸ்திரேலியாவில் இருந்த போது கடந்த, 2014ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அவருடைய வங்கி கணக்கில் இருந்து, பல நாட்களில், ரூ.3.25 லட்சம், முறையற்ற வகையில், ஏ.டி.எம்., வாயிலாக அவருக்கு தெரியாமல், அவருடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது.
இது குறித்து எச்.டி.எப்.சி., வங்கி நிர்வாகம், அவருக்கு எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. அவர் மீண்டும் தனது வங்கி கணக்கை, சரி பார்த்த போது, ரூ.3.25 லட்சம், சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது தெரிந்தது.
இந்நிலையில், எச்.டி.எப்.சி., வங்கி அவருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பாமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், புகார் மனு அளித்தார். மனு மீது விசாரணை நடந்து வந்தது. இதில் எச்.டி.எப்.சி., வங்கி நிர்வாகம் பங்கேற்றது.
விசாரணை முடிந்து, ஆணையத்தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் சுவிதா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கினர்.
அதில், எச்.டி.எப்.சி., வங்கி கவனக்குறைவாக நடந்து கொண்டது மட்டு மில்லாமல், சேவை குறைபாடு செய்துள்ளது நிருபிக்கப்பட்டதாக கருதி, முறையீட்டாளருக்கு ஏற்பட்ட பண நஷ்டம், ரூ.3.25 லட்சத்தை வழங்க உத்தர விடப்பட்டது. மேலும் வழக்கு செலவாக, ரூ.20 ஆயிரம் வழங்கவும், தீர்ப்பில் கூறப்பட்டது.