/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள் ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்
ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்
ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்
ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்
ADDED : ஜூலை 21, 2024 05:54 AM
பு துச்சேரி போலீசில் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர் கள், ஏட்டு, உதவி சப்இன்ஸ் பெக்டர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவர்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு கூட சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா பரிந்துரையின்பேரில், காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சில இன்ஸ்பெக்டர்கள், தங்களுக்கு விசுவாசமான சில ஏட்டுகள், போலீஸ் எழுத்தர்கள், கலெக் ஷன் காவலர்களை, பாஸ்போர்ட் அடிப்படையில் மீண்டும் தங்களின் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டனர்.
இதனால் ஒரே போலீஸ் நிலையத்தில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஏட்டுகள், காவலர்கள் பணியாற்றி வருவதாக சக காவலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய காவலர்களை கண்டறிந்து, வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றும் வரை சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாது.