ADDED : ஜூலை 03, 2024 05:58 AM
புதுச்சேரி : உத்திரபிரதேச மாநிலத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்கு கவர்னர், முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல் செய்தியில், உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்னர்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ரங்கசாமி இரங்கல் செய்தியில், உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி இறைவனை பிராத்திக்கிறேன்.