ADDED : ஜூலை 29, 2024 06:19 AM

பாகூர், : கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்த ராஜசேகரன் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தெற்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். ராஜசேகர் ஏற்புரை வழங்கினார்.
இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டினர்.