ADDED : ஜூன் 03, 2024 04:41 AM

புதுச்சேரி : ஓய்வு பெற்ற கடன் ஆய்வாளர், மேற்பார்வையாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில் பணி புரிந்து வந்த கடன் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில் நடந்தது.
வாரியத்தின் தலைமை செயல் அலுவலரும் புதுச்சேரி அரசின் தொழில் மற்றும் வணிகத் துறை துணை இயக்குனருமான நரேந்திரன் இருவரது சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
கண்காணிப்பாளர் சரவணன், தர்மதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.