/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 30ம் தேதி போட்டித் தேர்வு ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 30ம் தேதி போட்டித் தேர்வு
ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 30ம் தேதி போட்டித் தேர்வு
ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 30ம் தேதி போட்டித் தேர்வு
ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 30ம் தேதி போட்டித் தேர்வு
ADDED : ஜூன் 08, 2024 04:19 AM
புதுச்சேரி, : ஊர்க்காவல் படை வீரர் பணிக்கான போட்டி தேர்வு வரும் 30ம்தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4,492 பேர் விண்ணப்பித்தனர். உடற்தகுதி பிப்ரவரி மாதம் நடந்தது. இதில், ஆண்கள் உடற்தகுதி தேர்வில் 3,034 பேரும், பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 1,195 பேரும் என, 4,229 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். லோக்சபா தேர்தல் காரணமாக ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு எழுத்து தேர்வு நடக்கவில்லை.
ஜூன் 16ம் தேதி ஊர்க்காவல் படை பணிக்கு எழுத்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஜூன் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர் தேர்வினை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 30ம் தேதி எழுத்து தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிர்வாக சீர்த்திருத்த துறையின் தேர்வு கட்டுப்பாட்டாளர் பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊர்க்காவல் படை வீரர் பணிக்கான எழுத்து வரும் 16ம் தேதி நடக்க இருந்தது. மத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக ஊர்க்காவல் படை வீரர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு எழுத்து தேர்வு நடக்கும். ஹால்டிக்கெட் எப்போது வழங்கப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும் என, கூறப்பட்டுள்ளது.