ADDED : ஜூலை 08, 2024 04:05 AM
பாகூர்: கல்லுாரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள கரையாம்புத்துாரை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகள் மகாலட்சுமி, 19; இவர், கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி பஸ்சில் சென்று வருகிறார்.
கடந்த 4ம் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது, அவர் கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரில், கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.