/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து நெரிசலை திறமையாக கையாள வேண்டும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவு போக்குவரத்து நெரிசலை திறமையாக கையாள வேண்டும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவு
போக்குவரத்து நெரிசலை திறமையாக கையாள வேண்டும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவு
போக்குவரத்து நெரிசலை திறமையாக கையாள வேண்டும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவு
போக்குவரத்து நெரிசலை திறமையாக கையாள வேண்டும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 04, 2024 03:40 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை திறைமையாக கையாள வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். போலீஸ் எஸ்.பி.க்கள் வீரவல்லவன், லட்சுமி சவுஜன்யா, செல்வம், வம்சீதரெட்டி, சப்கலெக்டர்கள், 4 தாலுகா தாசில்தார்கள், அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரியில் போதைப்பொருள் விற்பனை, மதுபானம் கடத்தல், போக்குவரத்து, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் பேனர் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். குற்ற வழக்குகளில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.
குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டுகள் சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். சப்கலெக்டர்கள், தாலுகா தாசில்தார்கள், சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்காணிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையத்துடன் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும்.
வாகன போக்குவரத்திற்கு இடையூறாக போக்குவரத்து சந்திப்புகளில் பேனர் வைப்பதை ஆரம்பத்திலே தடுக்க வேண்டும். தாசில்தார் மற்றும் போலீசார் வெடிபொருள் தயாரிக்கும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, திறமையாக கையாள அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் தெரிவித்தார்.