Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 23, 2024 02:33 AM


Google News
புதுச்சேரி : லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை நான் முதல்வராக இருந்தபோது மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய அப்போது இருந்த கவர்னர் கிரண்பேடி மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோப்பு அனுப்பினோம்.

அவர் இழுத்தடித்து ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய வைத்தனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி இதனை விமர்சித்தார்.

ஆனால் தற்போது அரசு அனுப்பியுள்ள பட்ஜெட் கோப்பிற்கு ஒரு மாதம் மேலாகியும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

ஏற்கனவே 3 ஆண்டாக ஆட்சியில் துாங்கியாகிவிட்டது. இப்போதாவது மக்களுக்கு உண்மையான பணி செய்ய முதல்வர் முன் வர வேண்டும். எங்கள் ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டியில் 62 திட்டங்களுக்கு 1000 கோடிக்கு பணிகளை துவங்கினோம். இந்த ஆட்சி ஸ்மார்ட் சிட்டியின் அனைத்தும் திட்டங்களும் முடங்கி விட்டது.

கடந்த 3 ஆண்டாக பா.ஜ., கூட்டணி அரசு பல்வேறு முறைகேடுகள், லஞ்சம் ஊழலில் திளைத்து வருவதாகவும் புகார் தொடர்ந்து கூறி வருகிறேன். தற்போது இந்த அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் பகிரங்கரமாகவே அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில் தனது தட்டாஞ்சாவடி தொகுதியில் தோல்வியை தழுவினார். அதேபோல் உள்துறை அமைச்சர் மண்ணாடிப்பட்டு தொகுதியில் தோல்விடைந்துள்ளார்.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us