/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எதிர்மறை எண்ணங்களுடன் கோப்புகளை அணுக வேண்டாம் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்' எதிர்மறை எண்ணங்களுடன் கோப்புகளை அணுக வேண்டாம் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
எதிர்மறை எண்ணங்களுடன் கோப்புகளை அணுக வேண்டாம் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
எதிர்மறை எண்ணங்களுடன் கோப்புகளை அணுக வேண்டாம் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
எதிர்மறை எண்ணங்களுடன் கோப்புகளை அணுக வேண்டாம் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
ADDED : மார் 14, 2025 04:33 AM

புதுச்சேரி: கவர்னர் உரையின்போது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தி பேசிய எம்.எல்.ஏ.,க்கள் தாங்கள் சொல்லுவதை அரசு அதிகாரிகள் கேட்பதில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
நேற்றைய கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திலும் இது எதிரொலித்தது.
பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., பேசும்போது, காரைக்காலுக்கு ஒரு அதிகாரிகளை அனுப்பினீர்கள். அவர் எல்லாவற்றையும் தடுத்து கொண்டே இருந்தார். தற்போது புதுச்சேரி வந்துள்ளார். எல்லாவற்றையும் தடுப்பார். நீங்கள் தான் பார்க்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் இணைந்து செயலாற்றினால் மாநில வளர்ச்சி ஏற்படும். கடந்த காலங்களிலும் அந்த நிலைபாட்டில் மாறுபட்ட கருத்துகள் இருந்தது உண். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றும்போது அதிகாரிகள் சட்டப்படி தான் செயல்படுவேன் என்று கூறினால், நிர்வாகத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.
ஒரு அரசு சார்பு நிறுவனத்திற்கு அவசரத்திற்கு பொட்டலம் மடிக்க ஆட்கள் எடுக்க வேண்டும் என்றால், அதை கொல்லைப்புற நியமனம் என்கின்றனர். சில வேலைகளுக்கு நேரடி தேர்வு எடுத்து வைக்க முடியாது.
இதனையெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எடுத்து சொல்லி இருக்க வேண்டும். அதை சரியாக எடுத்து கூறாததால் நீதிமன்ற உத்தரவுகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சங்கடங்கள், தடைகள் இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி தான் மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் அதிகாரிகள் கோப்புகளை கையாள வேண்டும். தற்போது அது போன்ற நிலைமை இல்லை. கவர்னர், தலைமை செயலர், நேர்மறை எண்ணங்களுடன் கோப்புகளை அணுக அறிவுறுத்தினர்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.