/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு
கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு
கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு
கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு
ADDED : ஜூன் 20, 2024 09:07 PM
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சாராயக்கடைகள் அனுமதி, அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை செய்ய கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில், 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகளுக்கு மறு ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகள் மறு ஏலக்கோப்பினை, கவர்னர் ராதாகிருஷ்ணன், கலால் துறைக்கே திருப்பி அனுப்பியதால், புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கவர்னரை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து, சாராயக்கடை, கள்ளுக்கடை ஏல கோப்பிற்கு அனுமதி பெற வாய்ப்புள்ளதாக, கூறப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில், நேற்று மதியம் 12:15 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி, 2 கோப்புகளுடன் கவர்னர் ராதாகிருஷ்ணனை அவரது மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு, அதிகபட்சமாக, 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதையடுத்து, மதியம், 12:30 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி, கவர்னர் மாளிகையில் இருந்து திரும்பினார். இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி, சாராயக்கடைகளுக்கு அனுமதி பெறுவதற்காக தான், கவர்னரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த சந்திப்பிற்கு, இன்னொரு முக்கிய காரணமும், அடிப்படையாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முதல்வர் ரங்கசாமி அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கி, கவர்னரிடம் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
சாராயகடைகள் மூடலா; கவர்னர் பளீச்
நேற்று கவர்னர் ராதாகிருஷ்ணன் மேற்கு வங்க உதய நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''புதுச்சேரியில், சாராயக்கடைகளுக்கான ஏலம் நிறுத்தி வைக்கப்படவில்லை. அதை நிறுத்துவதற்கான முயற்சியும் இல்லை. அதுபோன்ற ஒரு யோசனையும் இல்லை. அதை எப்படி முறைப்படுத்துவது, அதை எப்படி மக்களின் வாழ்விற்கு எதிராக இல்லாமல், ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது குறித்து, யோசித்து கொண்டிருக்கிறோம், ''என்றார்.