Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் ரங்கசாமி திடீர் விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் ரங்கசாமி திடீர் விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் ரங்கசாமி திடீர் விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் ரங்கசாமி திடீர் விருந்து

ADDED : ஜூன் 17, 2024 06:46 AM


Google News
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அளித்த விருந்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் குழப்பத்துடன் வீடு திரும்பினர்.

புதுச்சேரி, லோக்சபா தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி சார்பில் களம் இறங்கிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். இது என்.ஆர்.காங்., பா.ஜ., கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் தோல்வியால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ.வுக்கு ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.கள் ரகசிய கூட்டம் நடத்தி, என்.ஆர்.காங். ஆளும் வரை பா.ஜ.வால் புதுச்சேரியில் வளர முடியாது. அதனால் முதல்வர் மற்றும் அமைச்சரவையை மாற்ற வேண்டும்.

புதுச்சேரியில் முழுக்க முழுக்க பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என, போர்கொடி துாக்கினர். இது புதுச்சேரி அரசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் 33 எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு சென்றது. முதல்வர் விருந்து தயார் செய்துள்ளார்.

அதில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டது. எதற்காக என்று வினா எழுப்பிய எம்.எல்.ஏ.,க்களிடம், சட்டசபை கூட்ட தொடருக்கு முந்தைய விருந்தாக இருக்கலாம் என, பதில் அளித்துள்ளனர்.

சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அசோக்பாபு, வெங்கடேசன், ராமலிங்கம், பிரகாஷ்குமார், லட்சுமிகாந்தன், சிவசங்கரன், தலைமை செயலர் சரத் சவுக்கான், கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் ராஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்கா, நேரு, ரமேஷ், ராஜவேல், ரிச்சர்ட், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் மற்றும் காங்., தி.மு.க. எம்.எல்.ஏ.கள் பங்கேற்கவில்லை.

விருந்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்., பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தல் தோல்வி, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ரங்கசாமி முக்கிய ஆலோசனை நடத்தலாம் என, எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் விருந்திற்கு வந்தவர்களை முதலில் வரவேற்ற முதல்வர் ரங்கசாமி, சாப்பிட கூறினார். விருந்தில் பிரியாணி, இறால் தொக்கு, மீன் வறுவல், சாம்பார், தயிர், ரசம் சாதம் பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பாடு நன்றாக இருந்தா என, மட்டும் விசாரித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

எதற்காக நம்மை கூப்பிட்டார், எதற்காக விருந்து கொடுத்தார். ஏன் எதை பற்றியும் ஆலோசிக்க வில்லை என்ற குழப்பத்துடனே எம்.எல்.ஏ.,க்கள் புறப்பட்டு சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us