/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தாக்கிய சென்னை வாலிபர் கைது பெண்ணை தாக்கிய சென்னை வாலிபர் கைது
பெண்ணை தாக்கிய சென்னை வாலிபர் கைது
பெண்ணை தாக்கிய சென்னை வாலிபர் கைது
பெண்ணை தாக்கிய சென்னை வாலிபர் கைது
ADDED : ஜூலை 04, 2024 03:29 AM
புதுச்சேரி : பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர், 28 வயது பெண். இவர், டேட்டிங் ஆப் மூலம், சென்னை அசோக் நகரை சேர்ந்த ஸ்டாலின்ராஜ், 31; என்பவருடன் பேசி பழகி வந்தார்.
ஸ்டாலின்ராஜ் நடவடிக்கை சரியில்லததால், அப்பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
அதையடுத்து, பல்வேறு மொபைல்கள் மூலம் அந்த பெண்ணை, அவர், தொடர்பு கொண்டு டார்ச்சர் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த அவர், அந்த பெண் வீட்டு முன்பு நின்று அவதுாறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஸ்டாலின்ராஜை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.